டிரம்பிற்கு பதிலடி கொடுத்தது ஈரான்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஜரிப் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, ஈரான் எங்களுடன் போர்புரிய விரும்பினால், ஈரான் அதோடு முடிந்துவிடும். அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்த முடியாது என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அலெக்ஸாண்டர், செங்கிஸ் உட்பட பிற ஆக்கிரமிப்பாளர்கள் செய்ய முடியாததை தன்னால் முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நம்புகிறார்.

பல்லாயிரமாண்டுகளாக ஈரானியர்கள் உயர்ந்த நிற்கும் நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் காணாமல் போய்விட்டனர். பொருளாதார பயங்கரவாதம், இன அழிப்பு தொந்தரவால் ஈரானுக்கு முடிவு கட்ட முடியாது.

ஒருபோதும் ஈரானியனை அச்சுறுத்தாதே. மரியாதையாக முயற்சி செய், அதற்கான பலன் கிடைக்கும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஜரிப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்