2 வயது சிறுமிக்கு நேர்ந்த நிலை.. ஹீரோ இளைஞர் செய்த செயல் : வைரல் வீடியோ

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

துருக்கியில் குடியிருப்பு ஒன்றின் இரண்டாவது தளத்திலிருந்து கீழே விழுந்த 2 வயது பெண் குழந்தையை, இளைஞர் ஒருவர் லவகமாக பிடித்து காப்பாற்றிய சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

இஸ்தான்புல், Fatih மாவட்டத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. சிரியாவை சேர்ந்த இரண்டு வயது குழந்தையான தோஹா முகமதை சிறு காயங்கள் கூட இன்றி 17 வயதான அல்ஜீரியாவிலிருந்து குடியேறிய ஃபியூஸி ஸபாத் என்ற இளைஞர் காப்பாற்றியுள்ளார்.

சம்பவத்தின் போது, தோஹாவின் தாய் சமயல் அறையில் சமைத்துக்கொண்டிருக்க, குழந்தை வேறு அறையில் உள்ள ஜன்னல் வழியே கீழே எட்டிப் பாரத்துக்கொண்டிருந்துள்ளார். குழந்தை அபாயகரமாக எட்டிப் பார்ப்பதை அத்தெருவில் உள்ள கடையில் வேலை செய்யும் ஃபியூஸி ஸபாத் கவனித்துள்ளார்.

உடனே, குடியிருப்பிற்கு கீழே சென்று நின்றுள்ளார். எதிர்பாராத விதமாக குழந்தை கீழே விழ, ஃபியூஸி ஸபாத் லவகமாக குழந்தையை பிடித்துள்ளார். இதில், குழந்தைக்கு சிறு காயங்கள் கூட ஏற்படவில்லை என பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஃபியூஸி ஸபாத்தை ஹீரோவாக கொண்டாடிய பெற்றோர், 200 துருக்கிய லிரா அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். ஃபியூஸி ஸபாத், குழந்தையை காப்பாற்றும் காட்சி அப்பகுதியிலிருந்த சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. தற்போது, குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்