தரையில் மோதி வெடித்து சிதறிய மர்மமான பறக்கும் பொருள்: மத்திய கிழக்கில் பதற்றம்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ் நாட்டில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று தரையில் மோதி வெடித்து சிதறியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சைப்ரஸ் வடக்கு பகுதியான தாஷ்கண்ட் என்ற இடத்திலே இவ்விபத்து நடந்தள்ளது. விபத்துக்குள்ளான இடத்தில் விழுந்து நொறுங்கிய பறக்கும் பொருளின் பாகங்களை ஆய்வு செய்து வரும் சைப்ரஸ் அதிகாரிகள், குறித்த பறக்கும் பொருள் தங்கள் ஆயுதப்படைகளுக்கு சொந்தமில்லை என்பதை மட்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த வடக்கு சைப்ரஸின் வெளியுறவு அமைச்சர் குத்ரெட் ஓசெர்சே, ஆரம்ப கண்டுபிடிப்புகளின் மூலம் வெடிப்பிற்கு காரணமானது, வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற விமானம் அல்லது ஏவுகணை என்று சுட்டிக்காட்டுகின்றன என தெரிவித்துள்ளார்.

சிதறிய பாகங்களில் உள்ள எழுத்துக்கள் மற்றும் அறிகுறிகளின் மூலம் விரைவில் என்ன நடந்தது என்பதைப் நம்மால் புரிந்துகொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரிய மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த முயன்ற போது இந்த விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இஸ்ரேல் விமானத் தாக்குதலைத் தடுக்க சிரிய வான் பாதுகாப்பு செயல்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் விபத்துக்குள்ளானது இஸ்ரேல் ஜெட் விமானம் என சிரிய குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், சிதறிய பாகங்களின் புகைப்படங்களை ஆய்வு செய்யும் நெட்டிசன்கள், இது இஸ்ரேலுக்கு சொந்தமான போர் விமானம் போன்று இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்