7 வினாடிகளில் 5 ஐ.எஸ் ஜிகாதிகளை சுட்டுக் கொன்ற பிரித்தானியா ஹீரோ: பயங்கர தாக்குதல் முறியடிப்பு

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஈராக்கில் வெடிகுண்டு தொழிற்சாலைக்குள் அதிரடியாக நுழைந்த பிரித்தானியாவின் சிறப்பு விமானப்படை வீரர்களில் ஒருவர், 5 ஜிகாதி பயங்கரவாதிகளை 7 வினாடிகளில் சுட்டுக் கொன்றுள்ளார்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஐ.எஸ் ஜிகாதிகள் பதுங்கியிருந்த வெடிகுண்டு தொழிற்சாலையில் திடீரென எஸ்ஏஎஸ் என்பப்படும் சிறப்பு பயிற்சி பெற்ற பிரித்தானியா ராணுவத்தினர் சோதனை நடத்தியபோது 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

சிறப்பு விமானப்படை என்றழைக்கப்படும் எஸ்ஏஎஸ் படை, ரகசியமாக அல்லது மிகவும் ஆபத்தான ராணுவ நடவடிக்கைகளுக்காக சிறப்பாக பயிற்சி பெற்ற பிரித்தானியா ராணுவத்தின் ஒரு பகுதியாகும்.

MI6 Agents மற்றும் ஈராக் சிறப்புப் படைகளுடன் இணைந்து பணியாற்றும் எஸ்ஏஎஸ், ஈராக் தலைநகரில் சந்தேகத்திற்கிடமான வெடிகுண்டு தொழிற்சாலை பற்றிய விவரங்கள் வழங்கப்பட்டது.

12 பேர் கொண்ட எஸ்ஏஎஸ் குழு பல நாட்களாக குறித்த இடத்தை கண்காணித்து வந்த நிலையில், ஜிகாதிகள் தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எஸ்ஏஎஸ் குழு தொழிற்சாலையில் நுழைந்தவுடன் ஆயுதமேந்திய குழுவினரை எதிர்கொண்டுள்ளனர். உடனே, எஸ்ஏஎஸ் குழுவைச் சேர்ந்த வீரர் தனது துப்பாக்கியால் முதலில் முன்று தாக்குதல்தாரிகளை சுட்டுக் கொன்றுள்ளார்.

சத்தம் கேட்டு உடனே அங்கு வந்த மற்ற இரண்டு ஜிகாதிகளையும் அவரே சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. 7 நொடிகளில் 5 ஜிகாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜிகாதிகள் மிக அருகில் இருந்துள்ளனர், வாகனத்தில் ஆயுதங்களுடன் அவர்கள் தாக்குதலில் ஈடுபட தயராக இருந்துள்ளனர். தலை இல்லாமல் இரண்டு உடல்கள் கிடப்பதை கண்ட மற்ற பல ஜிகாதிகள் எஸ்ஏஎஸ் குழுவிடம் சரணடைந்துள்ளனர்.

இறந்த இரண்டு ஜிகாதிகள் தற்கொலை உடைகள் அணிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. உடைகளில் பிளாஸ்டிக் வெடிபொருட்கள் மற்றும் மோசமான குண்டுகள் வைத்து இருந்துள்ளனர். அவர்கள் பெரிய தாக்குதல் நடத்தி பல உயிரிழப்புகளை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

எனினும், அதிரடியாக நுழைந்த எஸ்ஏஎஸ் குழு தாக்குதலில் ஈடுபடவிருந்த ஜிகாதிகளை கொன்று பெரிய தாக்குதலை முறியடித்துள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்