வெளிநாட்டில் பாரிய விபத்தில் சிக்கிய இந்திய குடும்பம்: அனைவரையும் இழந்து உயிருக்கு போராடும் குழந்தை!

Report Print Vijay Amburore in மத்திய கிழக்கு நாடுகள்

ஓமனில் அரங்கேறிய கொடூரமான கார் விபத்தில் இந்திய குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை பூர்விகமாக கொண்ட கோசுல்லா அஸ்மதுல்லா கான் (30) மற்றும் அவரது 29 வயது மனைவி ஆயிஷா சித்திகா ஆகியோர் குழந்தைகளுடன் ஓமனின் சலாலாவிலிருந்து துபாய் திரும்பும் வழியில் பெரிய கார் விபத்தில் சிக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் கணவன் - மனைவி மற்றும் அவர்களுடைய எட்டு மாத மகன் ஹம்ஸா கான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே நேரத்தில் அவர்களின் மூன்று வயது மகள் ஹனியா சித்திகாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இரண்டு கார்களும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில், மற்றொரு காரில் இருந்த மூன்று வெளிநாட்டவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்த இந்தியர்களின் சடலங்கள் இன்று காலை மஸ்கட்டில் இருந்து ஐதராபாத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. பலத்த காயங்களுடன் அவர்களுடைய குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்