புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யும் LG

Report Print Givitharan Givitharan in மொபைல்

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான LG ஆனது மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

LG Q8 எனும் இக் கைப்பேசியானது 5.2 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய IPS தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

தவிர Qualcomm Snapdragon 820 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

சேமிப்பு நினைவகத்தினை microSD கார்ட்டின் உதவியுடன் 2TB வரை அதிகரிக்கக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

இவற்றுடன் 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை எற்படுத்துவதற்கான கமெரா 3,000mAh மின்கலம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இந்த வாரம் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியானது அடுத்த மாதம் ஆசிய நாடுகளில் அறிமுகம் செய்யப்படுகின்றது.

எனினும் இதன் விலை தொடர்பான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers