4000mAh மின்கலத்துடன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

சீனாவை தளமாகக் கொண்ட பிரபல ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான Xiaomi மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

Xiaomi Redmi 7A எனும் குறித்த கைப்பேசியானது நீலம் மற்றும் கறுப்பு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் திரையானது 5.45 அங்குல அளவுடையதும், 720 x 1440 Pixel Resolution உடைய HD+ தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

தவிர Octa-Core Qualcomm Snapdragon 439 Processor, பிரதான நினைவகமாக 2GB/3GB RAM, 16GB/32GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இவற்றுடன் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, நீடித்து உழைக்கக்கூடிய 4000mAh மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தற்போது கைப்பேசி தொடர்பான சிறப்பியல்புகளை மாத்திரம் வெளியிட்டுள்ள Xiaomi நிறுவனம் அதன் விலை தொடர்பான தகவல் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers