5 கமெராக்களைக் கொண்ட Nokia 9 கைப்பேசி தொடர்பான வீடியோ வெளியானது

Report Print Givitharan Givitharan in மொபைல்

அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட கைப்பேசிகளை அறிமுகம் செய்ய ஆரம்பித்ததன் பின்னர் நோக்கியா நிறுவனம் மீண்டும் தனக்கான இடத்தை உலக கைப்பேசி சந்தையில் பிடித்துள்ளது.

இப்படியிருக்கையில் மற்றைய ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சவால் விடும் வகையில் 5 கமெராக்களை கொண்ட கைப்பேசியினை முதன் முறையாக அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் Nokia 9 எனும் குறித்த ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியானது 5.00 அங்குல அளவுடைய pOLED திரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Snapdragon 845 Processor மற்றும் பிரதான நினைவகமாக 6GB RAM என்பனவும் தரப்பட்டுள்ளன.

இவற்றுடன் 12 மெகாபிக்சல்களைக் கொண்ட 5 பிரதான கமெராக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 3 கறுப்பு வெள்ளை கமெராக்களும், 2 RGB வர்ண கமெராக்களும் ஆகும்.

தவிர 20 மெகாபிக்சல்களைக் கொண்ட செல்ஃபி கமெராவும் தரப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers