இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படவுள்ள புத்தம் புதிய ஐபோன்

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிள் நிறுவனம் இவ் வருடம் தனது நான்கு வகையான புதிய ஐபோன் 12 மொடல்களை அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசிகள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் மற்றுமொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவத இக் கைப்பேசிகளில் iPhone Pro எனும் மொடல் ஆனது இந்தியாவிலே அசெம்பிள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பிரேசிலின் தேசிய தொலைத்தொடர்பாடல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி இக் கைப்பேசிகளை பிரேசிலில் உள்ள Foxconn நிறுவனத்திலிரும் அசெம்பிள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமையாக ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களை சீனாவில் வைத்தே அசெம்பிள் செய்து வருகின்றது.

காரணம் அசெம்பிள் செய்வதற்கான செலவு சீனாவில் குறைவு என்பதனாலாகும்.

எனினும் இம் முறை சீனாவிலும் iPhone 12 Pro அசெம்பிள் செய்யப்படுவதுடன் சீனாவிற்கு வெளியே பிரேஸில் மற்றும் இந்தியாவிலும் அசெம்பிள் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்