புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யும் Huawei

Report Print Givitharan Givitharan in மொபைல்
28Shares

சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் Huawei நிறுவனமானது தனது மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

Huawei Y7a எனும் இக் கைப்பேசியானது 6.67 அங்குல அளவுடைய Full HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Kirin 710A mobile processor, பிரதான நினைவகமாக 4GB RAM, மற்றும் 64GB அல்லது 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

மேலும் அன்ரோயிட் 10 இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் இக் கைப்பேசியின் சேமிப்பு நினைவகத்தினை 512GB வரை அதிகரிக்கக்கூடிய வகையில் microSD கார்ட் வசதியும் தரப்பட்டுள்ளது.

இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், தலா 2 மெகாபிக்சல்களை உடைய இரு கமெராக்கள் என 4 பிரதான கமெராக்களையும் உள்ளடக்கியுள்ளது.

இவற்றிற்கு மேலாக 22.5 வாட்ஸ் அதிவேக சார்ஜ் தொழில்நுட்பம், 5000 மின்கலமும் காணப்படுகின்றது.

இதன் விலையானது 190 டொலர்கள் ஆகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்