Huawei அறிமுகம் செய்யும் Mate 30E Pro ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
5Shares

குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் Huawei நிறுவனம் Mate 30E Pro எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசியானது 6.53 அங்குல அளவுடையதும், 2400 x 1176 Pixel Resolution உடையதுமான OLED தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Kirin 990 mobile processor, பிரதான நினைவகமாக 8GB RAM மற்றும் 128GB அல்லது 256GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளது.

தவிர 32 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, தலா 40 மெகாபிக்சல்களை உடைய இரு கமெராக்கள், 8 மெகாபிக்சல்களை உடைய கமெரா என 3 பிரதான கமெராக்களையும் கொண்டுள்ளது.

Android 10 மற்றும் EMUI 11 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியானது Space Silver, Cosmic Purple மற்றும் Emerald Green ஆகிய வர்ணங்களில் அறிமுகம் செய்யப்படுகின்றது.

இதேவேளை இக் கைப்பேசியின் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்