வாடிக்கையாளர்களுக்கு காப்புறுதி வசதியை அறிமுகம் செய்யும் Tesla நிறுவனம்

Report Print Givitharan Givitharan in வாகனம்

பிரபல கார் வடிவமைப்பு நிறுவனமான Tesla தனது வாடிக்கையாளர்களுக்கான காப்புறுதி வசதியை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

குறித்த நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான Elon Musk கடந்த ஏப்ரல் மாதத்தில் இத் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஆகக்குறைந்தது 20 சதவீத காப்புறுதியை வழங்க முன்வந்துள்ளது.

சில சந்தர்ப்பங்களில் 30 சதவீதமாகவும் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் முதற்கட்டமாக இவ் வசதி கலிபோர்னியாவில் மாத்திரமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் அமெரிக்காவின் ஏனைய பகுதிகளுக்கும் இவ் வசதி விஸ்தரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஏனைய பகுதிகளுக்கு எப்போது விஸ்தரிக்கப்படும் என்பது தொடர்பான கால எல்லை குறிப்பிடப்படவில்லை.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்