அதிநவீன இலத்திரனியல் காரின் மாதிரியை அறிமுகம் செய்தது சோனி

Report Print Givitharan Givitharan in வாகனம்

முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமாக திகழும் சோனி நிறுவனம் அதி நவீன இலத்திரனியல் கார் ஒன்றின் மாதிரியை அறிமுகம் செய்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற CES நிகழ்விலேயே இந்த காரினை காட்சிப்படுத்தியுள்ளது.

Vision S என இக் காரிற்கு தற்போது பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் காரில் மிகவும் அகலமான பனோரமா வகையை சேர்ந்த திரை பொருத்தப்பட்டுள்ளது.

இதில் வாகனம் செலுத்துதல் தொடர்பான அனைத்து தகவல்களும் டிஜிட்டல் முறையில் காணப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்.

அது தவிர குறித்த திரையில் பொழுதுபோக்கு அம்சங்களையும் பார்வையிட முடியும்.

மேலும் இக் காரில் 33 சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்து சோனி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Kenichiro Yoshida எதிர்கால போக்குவரத்தினை மேம்படுத்த தாம் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் இக் காரினை பொதுமக்களின் பாவனைக்கு விடுவது தொடர்பில் எந்த தகவலும் குறித்த நிகழ்வில் வெளியிடப்படவில்லை.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்