பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இவ்வளவு கொடூரமானவரா? முன்னாள் காவலர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
762Shares

பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதி தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்களை கொடூரமாக கொன்றுள்ளதாக அவரது முன்னாள் காவலர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதியான Rodrigo Duterte கடந்த யூன் மாதம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

எனினும், இதற்கு முன்னதாக வகித்த பதவிகளில் அவர் பல மனித உரிமை மீறல்களில் ஈடுப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 1988ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை சுமார் 1,000 பேரை சுட்டுக்கொல்ல அவர் உத்தரவிட்டதாக மரண தண்டனையை நிறைவேற்றும் குழுவில் இருந்த முன்னாள் காவலர் ஒருவர் பரபரப்பு புகாரை வெளியிட்டுள்ளார்.

பின்னர், 1993ம் ஆண்டு Davao நகரின் மேயராக பணியாற்றியபோது பல மனித உரிமைகளை மீறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதே ஆண்டில் மேயருக்கு எதிராக செயல்பட்டவர்களை கொல்ல அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த மரண தண்டனையை நிறைவேற்ற Edgar Matobato என்ற அந்த காவலருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், அப்போது அந்த காவலரின் துப்பாக்கியில் குண்டுகள் இல்லாததால் முன்னாள் மேயரும் தற்போதையை ஜனாதிபதியான Rodrigo Duterte ஒரு இயந்திர துப்பாக்கியை கொண்டு வந்து அவரே சுட்டுக் கொன்றதாக காவலர் தற்போது வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், குற்றம் செய்பவர்களையும் தனக்கு எதிராக செயல்படுபவர்களையும் உயிருடன் முதலைகளுக்கு தீனியாக போடும்படி ஜனாதிபதி உத்தரவிட்டதாக காவலர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

எனினும், முன்னாள் காவலர் வெளியிட்டுள்ள இந்த தகவல் அனைத்தும் அடிப்படை ஆதாரம் இல்லாதது என அந்நாட்டு அரசு மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments