ஆம்புலன்ஸ் வாகனத்தால் உயிரை விட்ட நோயாளி: நடந்தது என்ன?

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

ஐயர்லாந்து நாட்டில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நோயாளி ஒருவர் ஆம்புலன்ஸ் வாகன விபத்தில் சிக்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐயர்லாந்தில் உள்ள Kildare என்ற நகரில் நாஸ் பொதுமருத்துவனை ஒன்று இயங்கி வருகிறது.

இந்த மருத்துவமனையில் அனுமதிக்க சிறிஸ்டோபர் பைர்ன் என்ற 70 வயதான நோயாளி ஒருவர் இன்று காலை அழைத்து வரப்பட்டார்.

மருத்துவமனையை அடைந்த பின்னர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த நோயாளியை இறக்கும் பணியில் மருத்துவர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

அப்போது, திடீரென ஆம்புலன்ஸ் வாகனம் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்துள்ளது. இதில், உள்ளே இருந்த நோயாளி பரிதாபமாக உடல் கருகி பலியானார்.

மேலும், நோயாளியை காப்பாற்ற முயன்ற இரண்டு மருத்துவர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

எனினும், இவ்விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. இரண்டு நாளில் வீடு திரும்ப இருந்த நோயாளி விபத்தில் சிக்கி பலியாகியுள்ளது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ் வாகன பயணம் தடைப்படக்கூடாது என்பதால் பொதுவாக 6 எரிவாயு சிலிண்டர்கள் அந்த வாகனத்தில் பயன்படுத்தப்படும். இதுபோன்ற ஒரு எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments