வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: தென் கொரிய செய்தி நிறுவனம் தகவல்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

வடகொரியா நாளை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை பரிசோதிக்க உள்ளதாக தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் வெளியான தகவலில், தென்கொரியாவுடன் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதை ராணுவ தினமாக வடகொரியா நாளை(27.07.2017) கொண்டாடுகிறது.

இதற்காக வடகொரியாவின் பியோங்கன் மாகாணத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என தெரிவித்துள்ளது.

இதற்கிடையே வடகொரியாவின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தென் கொரியா பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers