ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்த பெண் கைது

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

உலக நாடுகளிலிருந்து மக்களை மூளைச்சலவை செய்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு சேர்த்து வந்த பெண் பிலிப்பைன்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து மக்களை மூளைச்சலவை செய்து இயக்கத்தில் சேர்த்து விடுகின்றனர்.

இதுதொடர்பாக பல்வேறு நாடுகளில் கடுமையான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் உட்பட சமூகவலைத்தளங்களில் இளைஞர்களை தங்கள் இயக்கத்துக்கு சேர்த்து வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பிலிப்பைன்ஸ் புலனாய்வு துறை பெண் ஒருவரை கைது செய்துள்ளது.

அவரது பெயர் Karen Aisha Hamidon என்பதும், பிலிப்பைன்சை சார்ந்த தீவிரவாதியான Mohammad Jafaar Maquid-ன் மனைவி என்பதும் தெரியவந்துள்ளது.

சமூகவலைத்தளங்களில் IslamQ&A மற்றும் Ummah Affairs என்ற ஓன்லைன் குரூப்பை நடத்தியுள்ளார்.

மேலும் இவர் 12க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தேடப்படும் குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers