நடுவீதியில் கட்டாயப்படுத்தி அரை நிர்வாணமாக்கப்பட்ட 16 வயது சிறுமி: அதிர்ச்சி காரணம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் சகோதரன் செய்த செயலுக்கு பழிவாங்க அவரின் தங்கையை கும்பல் ஒன்று அரை நிர்வாணமாக வீதியில் நடக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சௌத்வான் நகரின் அருகில் அமைந்திருக்கும் கிராமத்தில் தான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

16 வயதான சிறுமி தன்னுடைய உறவுக்கார பெண்களுடன் அங்குள்ள குட்டையில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார்.

அப்போது சிறுமியை வழிமறித்த ஒரு கும்பல் அவரை அடித்ததோடு கீழே பிடித்து தள்ளியுள்ளது.

கும்பலில் இருந்த ஆண்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்தனர். சிறுமியின் உடையை கத்திரிக்கோல் வைத்து வெட்டிய அவர்கள் சிறுமியை அரை நிர்வாணமாக கட்டாயப்படுத்தி கிராமத்தின் சாலையில் நடக்க வைத்துள்ளனர்.

ஒரு மணி நேரத்துக்கு பின்னரே சிறுமியை விடுவித்துள்ளனர். சிறுமி கூறுகையில், இதன் பின்னர் அருகிலிருந்த என் மாமா வீட்டுக்கு சென்று அங்கிருந்த உடைகளை எடுத்து உடுத்தி கொண்டதாக கூறியுள்ளார்.

அங்கிருந்த உள்ளூர் ஊடகங்களில் நடந்த விடயங்களை சிறுமி சொன்ன பின்னரே இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது குறித்து சிறுமியின் தாய் கூறுகையில், என் மகளை இப்படி செய்வதையறிந்து வீட்டிலிருந்து வெளியில் வந்து ஏன் இப்படி செய்கிறீர்கள் என அந்த கும்பலிடம் கேட்டேன்.

அதற்கு பதிலளிக்காத அவர்கள் உன் மகன் எங்கே என கேட்டதுடன் என்னை கேலியும் செய்தார்கள் என கூறியுள்ளார்.

இதனிடையில் இச்சம்பவத்துக்கான காரணத்தை ஊர்மக்கள் சிலர் கூறியுள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்னர் சிறுமியின் சகோதரருக்கும், கிராமத்தில் உள்ள ஒரு இளம் பெண்ணுக்கும் தொடர்பு இருந்துள்ளது.

பெண்ணுக்கு, இளைஞர் செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். இந்த விடயம் பெண் குடும்பத்தாருக்கு தெரிந்த நிலையில் ஊர் பெரியவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து பெண்ணிடம் தொடர்பில் இருந்ததற்காக இளைஞர் 300,000 ரூபாய் அபராதம் கட்டவேண்டும் உத்தரவிடப்பட, அவரும் கட்டியுள்ளார்.

இச்சம்பவம் நடந்து மூன்று வருடங்களுக்கு பின்னரும் அதை மறக்காத பெண் குடும்பத்தார் இளைஞர் வீட்டாரை பழிவாங்கவே இப்படி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் இன்னொருவரை தேடி வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்