வடகொரியாவில் மிகவும் பிரபலமான பரிசுப் பொருள் எது தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வடகொரிய மக்களால் மிக பிரபலமாக பகிர்ந்துகொள்ளப்படும் பரிசுப் பொருள் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

வடகொரியாவில் கருத்தடைக்கு தடை விதிக்கப்பட்டு மக்கள் தொகையை அதிகரிக்கச் செய்ய அந்த நாட்டு அரசாங்கம் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில்,

அங்குள்ள பெருங்குடி மக்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆணுறையை பரிசாக வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி கடத்தல்காரர்கள் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆணுறைகளை வாங்கி வந்து பாலியல் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு விற்று காசு பார்ப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

உலகிம் ஒட்டுமொத்த நாடுகளிலும் இருபாலருக்குமான ஆணுறைகள் புழக்கத்தில் இருக்கும் நிலையில், வடகொரியாவில் ஆணுறைகள் தயாரிப்பதும் விற்பனை செய்வதும் கிம் ஜாங் உன் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

மட்டுமின்றி சுங்க இலாகாவினால் ஆணுறைகள் கடத்தி வரப்படுவதையும் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனாலும் வடகொரிய மக்களிடம் ஆணுறைகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதாக சீனத்து வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாலியல் தொழில் வடகொரியாவில் கொடிகட்டி பறப்பதால், ஆணுறைகளுக்கு அங்கு அதிக தேவை இருப்பதாகவும், இதனால் வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்