மருத்துவமனையில் தாய்க்கு ஏற்பட்ட நிலை: பிறந்த குழந்தையை பிரிட்ஜில் வைத்து பாதுகாத்த கொடுமை

Report Print Santhan in ஏனைய நாடுகள்
559Shares
559Shares
lankasrimarket.com

பெரு நாட்டில் இறப்புச் சான்றிதழ் கொடுக்க தாமதமாக்கியதால் குழந்தையின் உடலை, தாய் வீட்டு பிரிட்ஜில் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெருநாட்டைச் சேர்ந்தவர் மோனிகா பலோமினா. இவருக்கு கடந்த சனிக்கிழமை குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தை சரியாக வளர்ச்சியடையாததால், திங்கட் கிழமை இறந்து விட்டது.

அங்கு இறப்பு சான்றிதழ் கொடுத்த பின்னர் தான் குழந்தைக்கு இறுதி சடங்குகள் செய்ய முடியும்.

ஆனால் மருத்துவமனையில் குழந்தைக்கு இறப்பு சான்றிதழை மருத்துவமனை தாமதப்படுத்தியுள்ளது, அதுமட்டுமின்றி மருத்துவமனை பாதுகாவலர் கொடுத்த தொந்தரவினால் குழந்தையின் உடலை மோனிகா தனது வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார்.

அதனால் அவரால் சான்றிதழ் பெற முடியவில்லை. சான்றிதழ் பெற வேண்டும் என்பதால், அவர் குழந்தையின் உடலை வீட்டு பிரிட்ஜில் வைத்துள்ளார்.

அதன் பின் கடந்த செவ்வாய் கிழமை, மருத்துவமனைக்கு சென்ற இவர் இது குறித்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து நடந்த விசாணை நடைபெற்று வருவதாகவும், அவருக்கு நேர்ந்தது மிகவும் தவறாகும்.

காவலாளி மருத்துவமனை விதிமுறைகளை மீறியுள்ளார். உடலானது இறப்புச் சான்றிதழ் கொடுக்கும் வரை பிணவறையில் பாதுகாக்க பட வேண்டும். ஆனால் உடல் பெற்றோரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு பொறுப்பையும் மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்