சிரியா ராணுவ விமான தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல்: வெளியான வீடியோ

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

சிரியாவில் ராணுவ விமானதளம் ஒன்றில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள பல்மைரா பகுதி அருகே உள்ள T-4 விமான தளம் மீதேஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

டூமாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டு கொத்து கொத்தாக குழந்தைகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரசாயன தாக்குதலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இதற்கு பின்னால் இருப்பது ரஷ்யா ஜனாதிபதி புடினும், ஈரானும் தான் என டுவிட் செய்துள்ளார்.

இந்நிலையில் ஏவுகணை மீது தாக்குதல் நடத்தியது அமெரிக்காவாக இருக்கலாம் என சிரியா அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது.

இதற்கிடையே பதிலடியாக சிரியா விமான பாதுகாப்பு படை எட்டு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்