வடகொரியா ஏவுகணை சோதனைகளை நிறுத்தியதன் உண்மை காரணம் இதுதான்: அம்பலப்படுத்திய சீனா

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வடகொரியா இனிமேல் ஏவுகணை சோதனை எதனையும் மேற்கொள்ளாது என அறிவித்ததன் உண்மை காரணம் இதுவாக இருக்கும் என சீனா நிபுணர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

வடகொரியாவின் அணுஆயுத சோதனை கூடம் எதிர்பாராத வகையில் மொத்தமாக இடிந்து விழுந்துள்ளதே அந்த நாடு இனிமேல் அணுஆயுத சோதனை எதையும் மேற்கொள்ளப் போவதில்லை என அறிவித்ததன் முதன்மை காரணம் என சீனா நிபுணர்கள் உறுதிபட தெரிவிக்கின்றனர்.

கடந்த சனிக்கிழமை வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை ஒருகணம் திரும்பி பார்க்க வைத்தார்.

தமது நாடு இனி மேல் அணுஆயுத சோதனைகளை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த உள்ளதாகவும் அறிவித்தது.

மட்டுமின்றி Punggye-ri பகுதியில் அமைந்துள்ள அணுஆயுத கூடம் ஒன்றை அகற்றமுடிவுசெய்துள்ளதாகவும் உறுதி அளித்தது. அமெரிக்க ஜனாதிபதியுடன் சந்திப்பு நடைபெறுவதற்கு முன்னர் கிம் ஜாங் உன் மேற்கொண்ட அதிரடி அறிவிப்பு இதுவென உலக நாடுகள் வடகொரியாவை பாராட்டின.

இந்த நிலையில் சீனா நிபுணர்கள் குழு ஒன்று வடகொரியாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

வடகொரியா கடந்த ஓராண்டாக தொடர்ந்து 5 ஏவுகணை சோதனைகளை வரிசையாக மேற்கொண்டுள்ளதில் குறித்த பகுதியானது மிகவும் பாதிப்புக்குள்ளானது எனவும், தொடர்ந்து அந்த பகுதியில் நில அதிர்வுகளும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருவதாகவும், இதனால் குறித்த பகுதியில் இனிமேல் வடகொரியாவால் அணுஆயுத சோதனை அல்லது ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ள முடியாது எனவும், அவ்வாறு மேற்கொண்டால் அது வடகொரியாவுக்கே பாரிய இழப்பாக அமையும் எனவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதனாலையே வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், இந்த அதிரடி முடிவுக்கு வந்தார் எனவும் அம்பலப்படுத்தியுள்ளது சீனா. மட்டுமின்றி போதுமான அளவுக்கு அணுஆயுதங்களை ஏற்கெனவே வடகொரியா உருவாக்கி வைத்துள்ளதாகவும், அதுவே உலக நாடுகளை அச்சுறுத்தும் எண்ணிக்கையில் உள்ளது எனவும் சீனத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers