என்னை அந்த நாட்டுக்கு அனுப்புங்க..நிச்சயம் பெருமை சேர்ப்பேன்: உதவி கேட்டு நிற்கும் தமிழக சிறுவன்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தமிழகத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் என்னை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தால் நிச்சயம் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என்று கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் சந்தையூர் அரசுப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் வீரபாண்டி. யோகா போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது, நான் 8 வயதில் இருந்தே யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும், பதக்கங்களும், சான்றிதழ்களும் பெற்றுள்ளேன்.

மாவட்ட அளவிலான ஆசனப்போட்டியில் 15 ஆசனங்கள் செய்து முதலிடம் பெற்றேன். கடந்த ஆண்டு மாநில அளவிலான ஆசனப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றேன்.

அதேபோன்று திருச்சியில் நடைபெற்ற யோகா மாரத்தான் போட்டியிலும் இரண்டாமிடம் பெற்றேன். சமீபத்தில் பாண்டிச்சேரியில் நடைபெற்ற போட்டியில் 2 இடம் பெற்றதன் காரணமாக சிங்கப்பூரில் நடைபெறும் உலக அளவிலான யோகாப் போட்டியில் கலந்து கொள்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நான் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சார்ந்தவன் என்பதால், வெளிநாட்டிற்கு செல்லும் அளவுக்கு தொகையைத் திரட்டுவதுக்கு என்பது என்னுடைய பெற்றொருக்கு இயலாத காரியம்.

ஆனால் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக சிங்கப்பூரில் நடைபெறும் யோகாசனப் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து இந்திய நாட்டுக்குப் பெருமை தேடித்தருவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இதனால் மத்திய, மாநில அரசுகளோ அல்லது தனிநபரோ உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று மாணவன் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்