வயதில் மூத்தவரை திருமணம் செய்து கொண்ட 17 வயது சிறுமி: நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
334Shares
334Shares
lankasrimarket.com

நைஜீரியாவில் 17 வயது சிறுமி தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் 33 வயதான நபரை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் சிறுமி குடும்பத்தார் திருமணத்தை ரத்து செய்ய கோரியுள்ளனர்.

இம்மானுவேல் (33) என்ற நபரும் பிளஸ்ஸிங் உடயி (17) என்ற சிறுமியும் வெவ்வேறு பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில் பொது இடம் ஒன்றில் சந்தித்து நட்பாகியுள்ளனர்.

இதையடுத்து தன்னை விட பல வயது மூத்தவர் என்றும் பாராமல் இம்மானுவேல் மீது உடயி காதல் கொண்டார்.

இதன்பின்னர் இருவரும் திருமணம் செய்ய நினைத்த நிலையில் ஆறு மாதங்களாக அது குறித்து திட்டம் தீட்டியுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் இம்மானுவேலும், உடயியும் குடும்பத்தினருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.

இது குறித்து உடயி தனது குடும்பத்தாரிடம் கூறிய நிலையில் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

பின்னர் உடயியை அடித்து உதைத்த குடும்பத்தார், 17 வயது மட்டுமே அவருக்கு ஆவதால் இந்த திருமணம் செல்லாது என புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள புதுமாப்பிள்ளை இம்மானுவேல் உள்ளூர் அரசாங்கக் கவுன்சிலிடம் தான் திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழை வாங்கிவிட்டதாகவும், இதை சட்டப்படி சந்திப்பேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்