60 வயதில் முதல் திருமணம் செய்த பாட்டி: மணமகன் வயது என்ன தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கென்யாவில் 60 வயது பாட்டி 78 வயது தாத்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சுவாரசிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

தெரிஷியா ஹோகி (60) என்ற பெண் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு முன்னர் மனைவியை இழந்த அயுப் முகோ (78) என்பவர் ஹோகியை பேருந்தில் பார்த்துள்ளார்.

பார்த்த கணமே ஹோகி மீது அவருக்கு காதல் வந்துள்ளது.

இதையடுத்து தன்னுடன் தேனீர் அருந்த ஹோகியை அயுப் அழைத்த நிலையில் அவரும் சென்றுள்ளார்.

பின்னர் இருவரும் நண்பர்களாகியுள்ளனர். இந்நிலையில் ஹோகியை காதலிப்பதாக அயுப் கூற அதற்கு அவர் சம்மதிக்கவில்லை.

ஆனால் தன் மீது அயுப் வைத்திருக்கும் காதலை பின்னர் உணர்ந்த ஹோகி காதலுக்கு சம்மதம் தெரிவிக்க இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

அயுப்பின் மூத்த மகன் செஜ் (50) கூறுகையில், என் தந்தையின் மகிழ்ச்சி தான் எங்களுக்கு முக்கியம்.

எங்களுக்கு மீண்டும் ஒரு தாய் கிடைத்திருப்பது அளவில்லா சந்தோஷத்தை கொடுத்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்