ஏழைக்கு வீடு கட்டி தர $400,000 நன்கொடை வசூலித்த தம்பதி: வசூலான பணத்தை வைத்து செய்த அதிர்ச்சி செயல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அமெரிக்காவை சேர்ந்த இளம்தம்பதி வீடில்லாமல் சாலையில் வசித்த நபருக்கு வீடு மற்றும் வசதிகள் செய்து கொடுக்க $400,000 வசூலித்த நிலையில், அவர்களே அந்த பணத்தை சுருட்டி கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

கேட் மெக்ளூர் மற்றும் மார்க் அமிகோ தம்பதி, வீடில்லாமல் சாலையில் வசித்து வந்த ஜானி போபிட் (35) என்பவருக்கு வீடு கட்டி தர முடிவெடுத்தனர்.

இதையடுத்து GoFundMe வலைதள பக்கம் மூலம் கேட் மற்றும் மார்க், நிதி திரட்ட தொடங்கினார்கள்.

மொத்தமாக 15000 பேர் ஜானிக்காக இரக்கப்பட்டு நிதியளித்த நிலையில் மொத்தமாக $400,000 பணம் கிடைத்தது.

இந்நிலையில் சாதாரண நிலையில் வாழ்ந்து வந்த கேட் மற்றும் மார்க் திடீரென வசதியாக மாறினார்கள்.

சொகுசு காரில் இருப்பது போலவும் டிக்கெட் விலை அதிகம் கொண்ட பார்டிகளில் கலந்து கொண்டது போலவும் உள்ள புகைப்படங்களை இருவரும் இணையத்தில் பதிவேற்றினார்கள்.

இதனால், நன்கொடையாக வசூலித்த பணத்தை அவர்கள் தங்கள் சொந்த தேவைகளுக்கு எடுத்து கொண்டார்கள் என்ற புகார் எழுந்தது.

இது குறித்து தம்பதி கூறுகையில், ஜானி தங்குவதற்கு கேரவன் என்ற சொகுசு வாகனத்தை வாங்க $200,000 செலவு செய்தோம்.

மேலும் ஜானி ஹொட்டலில் தங்க, அவருக்கு, டிவி, செல்போன்கள், லேப்டாப், கார் போன்ற விடயங்களுக்காக $25,000 செலவு செய்தோம்.

ஆனால் போதை மருந்துக்கு அடிமையான ஜானி எங்களிடம் இருந்து பணத்தை திருடியதால் அவரை கேரவனிலிருந்து துரத்திவிட்டோம் என கூறியுள்ளனர்.

இந்நிலையில் வீடு கிடைக்கும் என நம்பியிருந்த ஜானி மீண்டும் சாலைக்கு வந்துள்ளார்.

அவர் கூறுகையில், தொடக்கத்தில் எல்லாம் நல்லப்படியாக நடந்தது, ஆனால் அவர்களின் பேராசை அனைத்தையும் மாற்றிவிட்டதாக கூறியுள்ளார்.

இதனிடையில், கேட் மற்றும் மார்க் நன்கொடையாக வசூலித்த பணத்தை தவறாக செலவு செய்தார்களா என GoFundMe அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers