விமானத்தில் பயணம் செய்த பயணிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி: வெளியான கண்கலங்க வைக்கும் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

துருக்கியில் விமானத்தில் பயணம் செய்த தன்னுடைய ஆசிரியரை கெளரவித்த விமானியின் செய்ல, அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

துருக்கி நாட்டில் ஆசிரியர் ஒருவர் விமானத்தில் பயணம் செய்வதற்காக விமானத்தில் ஏறியுள்ளார். அப்போது விமானத்தை இயக்கும் விமானியிடம் இருந்த ஒரு அறிவிப்பு வருகிறது.

அதில் விமானத்தில் இருந்த ஆசிரியர் குறித்தும் அவரது பணி குறித்தும் அந்த விமான உருக்கமாக கூறுகிறார்.

அதன் பின் விமானி தான் அந்த ஆசிரியரின் மாணவன் எனவும், தனக்கு பிடித்தமான ஆசிரியர் இவர் தான் எனவும் எல்லோருக்கும் கேட்கும் படி மைக்கிலேயே அறிவிக்கிறார்.

இதைத் தொடர்ந்து விமான ஊழியர்கள் வரிசையாக வந்து ஆசிரியருக்கு பூங்கொத்து ஒன்றை அன்பளிப்பாக அளித்து அந்நாட்டு கலாச்சாரப்படி அவரது கையில் முத்தமிட்டு அவருக்கு மரியாதை செய்தனர்.

விமானி அந்த ஆசிரியருக்கு மரியாதை செய்து கட்டியனைத்து தான் இந்த நிலையில் இருப்பதற்கு இவர் ஒரு முக்கிய காரணம் என கூறி அவருக்கு நன்றி கூறினார்.

இச்சம்பவம் அந்த விமானத்தில் வந்த மற்ற பயணிகளின் கண்களை கலங்க வைத்தது. அதுமட்டுமின்றி இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்