நடுவானில் தீப்பிடித்து எரிந்ததா காணாமல் போன மலேசிய விமானம்? என்ன நடந்திருக்கலாம்?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

2014-ல் காணாமல் போன மலேசிய விமானம் வானில் பறக்கும் போதே தீப்பிடித்து எரிந்ததாகவும், அதையடுத்து விமான நிலையம் நோக்கி வர முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மலேசிய விமானம் எம்எச் 370 கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 239 பேருடன் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு புறப்பட்டது.

இந்திய பெருங்கடல் பகுதியில் பறந்த போது கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீரென மாயமானது.

விமானமானது இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என விசாரணை குழுவினர் தெரிவித்தனர்.

அந்த விமானத்தை தேடும் பணியில் மலேசியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டன. இதில் எந்த தகவலும் கிடைக்காததால் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது.

இந்நிலையில் மலேசிய விமானம் பறக்கும் போதே தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என முன்னாள் விமானியும், விமான துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் உள்ளவருமான ரோஸ் எய்மர் என்பவர் தெரிவித்துள்ளார்.

தற்போது Aero Consulting Experts-ன் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள ரோஸ் எய்மர் கூறுகையில், விமானமானது நடுவானில் தீப்பிடித்து எரிந்த நிலையில் விபத்தை தடுக்க மனித கட்டுபாடு இல்லாமல் விமானத்தின் பாதையை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் auto-pilot முறை பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

இதன் மூலம் விமானத்தை இடது பக்கமாக திருப்பி மலேசியாவின் பினாங் விமான நிலையத்துக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.

ஆனால் இந்த முயற்சி தோல்வியடைந்த காரணத்தால் விமானம் இந்திய பெருங்கடல் நோக்கி சென்றிருக்கலாம் என கருதுகிறேன் என கூறியுள்ளார்.

இதோடு, விமானத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் உள்ளிருந்த குழுவினர் பலர் அப்போதே இறந்திருக்கக்கூடும்.

ஆனால் விமானிகள் கட்டுப்பாடு இல்லாமல் auto-pilot முறையில் விமானமானது பினாங் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்