உடல் எடையை குறைக்க கூறிய விமான நிறுவனம்: அதிர்ச்சியில் பணியாளர்கள்

Report Print Gokulan Gokulan in ஏனைய நாடுகள்

PIA ஏர்-லைன்ஸ் நிறுவனம் தனது பணியாளர்களிடம் உடல் எடையை குறைக்கா விடில் ஜூலை மாதம் பணி இழக்க நேரிடும் என்று அறிவித்துள்ளது பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் இன்டர்நேசனல் ஏர்லைன்ஸ் நிறுவனமான PIA கடந்த சில மாதங்களாக பயணிகள் வரத்து குறைவால் பில்லியன் ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது. இதனை அடுத்து அந்நிறுவனம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, நிறுவனத்தின் பணியாளர்கள் அனைவரும் தங்களது எடையை குறைக்க வேண்டும் என்றும். அனைவருக்கும், உயரத்திற்கு ஏற்ற பருமன் இருக்க வேண்டும் என்றும், தங்களை அனைத்து ஊழியர்களும் அழகான உடல் வடிவம் கொண்டவர்களாக மாற்றி கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மேலும் வரும் ஜூலை மாதத்திற்குள் பருமனை குறைத்து அழகானவர்களாக மாற்றி கொள்ளவில்லை எனில் பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

அளவான உடல் எடை கொண்டவர்களாக பணியாளர்கள் கருதினால், அவர்களை முழு சோதனைக்கு உட்படுத்திய பின்னரே விமானத்தில் ஏற அனுமதிக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இதுவரை 800 பணியாளர்களுக்கு PIA - நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்