அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள்: பரபரப்பை ஏற்படுத்திய பெண் பிரதமர்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

பிறப்பு வீதம் குறைவாக இருப்பதால் நாட்டிற்கு அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் தேவை என நார்வே நாட்டின் பிரதமர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில் குழந்தை பிறப்பு வீதம் குறைவாக உள்ளது. இதனால் அந்நாட்டின் பிரதமர் எர்னா சோல்பெர்க் சமீபத்தில் நாட்டு மக்களுக்கு செய்தி ஒன்று விடுத்தார்.

அதில் அவர் கூறுகையில், ‘நமது நாட்டுக்கு இப்போதைய தேவை அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் தான். இதை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை என்று கருதுகிறேன்.

இனி வரும் காலத்தில், இதேபோல் நாடு இருந்தால் (பிறப்பு வீதம் குறைவாக இருந்தால்) நாம் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்’ என தெரிவித்தார்.

பெண் பிரதமரான எர்னா சோல்பெர்க்கின் இந்த பேச்சு அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நார்டிக் நாடுகள் என்று அழைக்கப்படக்கூடிய நார்வே, சுவீடன், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து நாடுகளில் குழந்தைகள் பிறப்பு வீதம் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers