விமானம் வெடித்து சிதற வேண்டும் என இருக்கையில் அமர்ந்து பிரார்த்தனை செய்த பயணி: பயத்தில் அலறிய சக பயணிகள்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானத்தில் ஏறிய பயணி ஒருவர் அந்த விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளாக வேண்டும் என பிரார்த்தனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் விமான நிலையத்திலிருந்து துபாய் வழியாக அவுஸ்திரேலியா செல்லும் விமானம் கிளம்ப தயாராக இருந்தது.

விமானத்தில் கலில் என்ற பயணி ஏறி இருக்கையில் அமர்ந்த நிலையில், விமானம் கிளம்பியவுடன் வெடித்து விபத்தில் சிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்ய தொடங்கினார்.

அவர் சத்தமாக இப்படி பிரார்த்தனை செய்வதை பார்த்து சக பயணிகள் பயத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்தனர்.

இதுகுறித்து விமானி உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்களுக்கு தகவல் கொடுத்த நிலையில் அங்கு வந்த ஊழியர்கள் கலிலை விமானத்தில் இருந்து இறக்கி அழைத்து சென்றனர்.

கலில் ஏன் அப்படி செய்தார் என தெரியாத சூழலில் அவர் குறித்த முழு விபரங்கள் எதுவும் இன்னும் தெரியவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்