157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்... கடைசியாக ரேடாரில் பதிவான காட்சி: செங்குத்தான வேகம் காரணமா?

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

கென்யா நோக்கி சென்ற எத்தியோப்பியா நாட்டு விமானம் இன்று விழுந்து நொறுங்கிய விபத்தில் 157 பேர் உயிரிழந்தனர்.

வானில் உயர எழும்பிய அந்த விமானம் 6 நிமிடங்களுக்குள் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் தேடுதலில் தலைநகர் அடிடாஸ் அபாபாவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கே உள்ள பிஷோஃப்டு என்ற நகரில் விமானம் விழுந்து கிடப்பது தெரியவந்தது.

149 பயணிகள், விமானிகள் உள்பட 8 விமானப் பணியாளர்கள் என 157 பேர் உயிரிழந்ததாக எத்தியோப்பியா அரசு தெரிவித்துள்ளது.

மேலும் எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமான விபத்து குறித்த புகைப்படங்களை தங்களது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விபத்தால் பூமியின் ஒரு பகுதி சிதைந்து போயுள்ளது.

எத்தியோப்பியா ஏர்லைன்ஸின் தலைமை செயல் அதிகாரி Mr Gerbremariam கூறியதாவது, விமானி மிகவும் திறமையானவர் என்றும் விமானத்தின் சிரமங்களை அறிந்து திரும்புவதற்கு முயற்சித்தார், ஆனால் விபத்து நடந்துவிட்டது.

மேலும், விமானத்தில் தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏதும் இல்லை என கூறியுள்ளார். ஆனால், விபத்திற்கான காரணம் சரியாக தெரியவில்லை என்றும் ரேடாரில் பதிவாகியுள்ள விவரத்தில், விமானம் நிலையற்ற செங்குத்தான வேகத்தை கொண்டிருந்தது என தெரியவந்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்