தாயாகும் வரை பலாத்காரம்... பிள்ளைகளை தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும்: பாலியல் அடிமைகளின் பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஆசிய நாடான மியான்மாரில் பாலியல் அடிமைகள் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையானது உலக அரங்கை உலுக்கியுள்ளது.

பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்ட இளம்பெண்களின் அவல நிலையை இந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

பாலியல் அடிமையாக நடத்தப்படும் பெண்கள் தாயான பின்னர் அவர்கள் கணவர்கள் இரண்டு வாய்ப்பு அளிப்பதாக கூறப்படுகிறது.

ஒன்று பெற்ற பிள்ளையை கணவரிடம் ஒப்படைத்துவிட்டு சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்வது, அல்லது வாழ்நாள் முழுக்க அடிமையாக கணவருடன் தங்கிகொள்ளலாம்.

மியான்மார் நாட்டின் சிறுபான்மை சமுதாயமான கச்சின் சமுதாயத்தில் பிறக்கும் பெண் பிள்ளைகளின் இந்த நரக வாழ்க்கைக்கு காரணம், இவர்களை விலைக்கு வாங்கும் சீனர்களே என்பது அந்த அறிக்கையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வேலை வாங்கித் தருவதாக கூறி சீனா எல்லையை கடக்கும் இளம் பெண்களில் பெரும்பாலானோர் சீனா ஆண்களின் கைகளில் சிக்குகின்றனர்.

குறிப்பிட்ட தொகைக்கு வாங்கப்படும் கச்சின் இளம் பெண்கள், பாலியல் அடிமையாக நடத்தப்பட்டு, நாள் தோறும் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

Give Us a Baby and We’ll Let You Go என்ற பெயரில் சீனாவில் நடந்தேறும் கொடுமைகள் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,

பல கச்சின் சமுதாய பெண்கள் மனம் திறந்துள்ளனர். குறித்த அறிக்கையானது தற்போது பெரும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு முதல் சீனாவின் மக்கள் தொகையை கணக்கில் கொண்டால், ஒவ்வொரு ஆண்டும் ஆண்களை விடவும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

பெண் சிசு கொலை, கருக்கலைப்பு உள்ளிட்ட காரணிகளால் இந்த குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது திருமண பந்தத்தை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கியது. ஆண்டு தோறும் லட்சக் கணக்கான சீனத்து ஆண்களுக்கு திருமணம் நடைபெறாமல் போனதையடுத்து,

பாலியல் தொழிலும், ஆட்கடத்தலும் அதிகாரிகளின் மவுன அனுமதியுடன் நடந்தேறியது.

மியான்மாரில் இருந்து சீனாவுக்கு செல்லும் பல பெண்கள் அவர்களின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் தூண்டுதலாலையே பாலியல் அடிமைகளாக மாற்றப்படுகின்றனர்.

எல்லை தாண்டிய பின்னரே பல பெண்களுக்கும் தாம் பாலியல் அடிமையாக விற்கப்பட்டுள்ள கொடூரம் தெரியவருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers