நடுவானில் விமானத்தை துரத்திய பறக்கும் தட்டுகள்: அதிர்ச்சியடைந்த பயணி.. வீடியோ!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தென் கொரியாவிலிருந்து தாய்லாந்து சென்ற விமானத்திற்கு அருகே 6 பாகங்களாக பிரிந்து பறக்கும் தட்டு ஒன்று சென்றுள்ள வீடியோ கட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தென் கொரியாவை சேர்ந்த லூகாஸ் கிம் என்பவர் தன்னுடைய வீட்டிலிருந்து தாய்லாந்திற்கு ஜெஜு ஏர் விமானம் மூலம் பயணித்துள்ளார்.

நடுவானில் சென்றுகொண்டிருக்கும் போது, மஞ்சள் ஒலியுடன் பசுமையான ஒரு துடிப்புடன் ஜன்னல் வழியே ஒரு பொருளை கண்டுள்ளார்.

ஆரம்பத்தில் அது ஒரு விமானமாக இருக்கலாம் என நினைத்துள்ளார். ஒரு விமானத்திற்கு அருகாமையில் மற்றொரு விமானத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஓன்று என்பதால், அவர் தன்னுடைய செல்போனில் அதனை பதிவு செய்ய ஆரம்பித்துள்ளார்.

ஆனால் அப்பொழுது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அந்த பறக்கும் பொருளானது 6 பாகங்களாக நடுவானில் பிரிந்துள்ளது.

இந்த வீடியோவினை பார்த்த இணையதளவாசிகள், ஒருவேளை, சூரிய ஒளியின் வெளிச்சம், சாளரம் மற்றும் சாளரங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கிம், 'நான் ஒரு கிறிஸ்தவன். இந்த உலகம் முழுவதையும் ஆராய்வதற்கு தான் கடவுள் கொடுத்திருக்கிறார்.

'எனவே, நம்மைப் போன்ற பிற சிந்தனைப் பிராணிகளும் உள்ளன என்று நான் நினைக்கவில்லை, ஆனால் மற்ற கிரகங்களில் வெவ்வேறு விலங்குகள் இருக்கலாம்.' என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...