பிரேசில் நாட்டில் 7 மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கி சூடு: 11 பேர் பலி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிரேசில் நாட்டில் பார் ஒன்றில் 7 துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் பார் உரிமையாளர் உட்பட 11 பேர் பலியாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரேசில் நாட்டின் பெலேம் நகரம் அருகே இயங்கி வரும் பார் ஒன்றில் 7 மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதில் பார் உரிமையாளர் உட்பட 11 பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட செய்திகள் வெளியாகியுள்ளன. பார் உரிமையாளரின் பெயர் Maria Ivanilza Pinheiro Monteiro என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து 5 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விரைந்த பொலிஸ் அதிகாரிகள், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு தாக்குதல்தாரி மட்டும் குண்டடி காயங்களுடன் பொலிஸாரிடம் சிக்கியிருப்பதாகவும், மற்ற நபர்கள் தப்பியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers