அனைவரையும் வித்தையால் மயக்கியவன்: இழப்பிற்கு பின்னும் காட்சிகள் மூலம் கண்கலங்க வைக்கும் சோகம்

Report Print Abisha in ஏனைய நாடுகள்

தாய்லாந்து நாட்டில் சுற்றுலா பயணிகளுக்கு வித்தை காட்டிய மூன்று வயது Dumbo என்னும் குட்டி யானை தவறி விழுந்ததில் இரு பின்னங்கால்களும் உடைந்து பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தாய்லாந் நாட்டில் உள்ள விலங்கியல் பூங்காவில் யானைகளை வைத்து வித்தை காட்டப்படுவது வழக்கம். இதில் 3 வயதான ஆண் குட்டி யானை தலைகீழாக நின்று சுற்றுலா பயணிகளிடம் ஆதரவைப் பெருமளவில் பெற்று வந்தது.

இந்நிலையில் சாகச நிகழ்ச்சியின் போது Dumbo-வின் பின்னங்கால்கள் உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அதற்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் மூன்று நாட்களுக்கு பின் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இறந்த யானை Dumbo-க்கு பலரும் தங்கள் ஆதரவு குரல்களை தெரிவித்துள்ளனர்.

மேலும், Dumbo என்பது அழைக்கப்படும் பெயர் எனவும் அதன் உண்மையான பெயர் Jumbo என்றும் அதன் பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அது உயிரோடு இருந்தபோது செய்த சாகசங்கள் வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளனர். அதை பார்க்கும் போது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்துவதாக அமைந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்