எச்.ஐ.வி பாதித்த மனைவியை கொன்று மரத்தில் கட்டித் தூக்கிய கணவர்: கூறிய அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானின் லார்கானா நகர் அருகே நபர் ஒருவர் எச்.ஐ.வி பாதித்த மனைவியை கொன்று மரத்தில் கட்டித் தூக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லார்கானா நகர் அருகே அமைந்துள்ள கிராமம் ஒன்றிலேயே குறித்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

மனைவிக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதை உறுதி செய்த நிலையில், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள அந்த நபர், குடியிருப்புக்கு வெளியே மரம் ஒன்றில் கட்டி தொங்கவிட்டுள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், அந்த நபரை கைது செய்துள்ளதுடன், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில்,

தமது மனைவி வேறு நபருடன் உறவு வைத்துக் கொண்டதாலையே எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

லார்கானா நகரில் கடந்த சில வாரங்களில் மட்டும் 700 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

பாதிப்புக்கு உள்ளான 700 பேரில் பெரும்பாலானவர்கள் 5 வயதுக்கும் குறைவான சிறார்கள் என தெரியவந்த நிலையில்,

குறித்த விவகாரம் தொடர்பில் மருத்துவர் ஒருவரை கடந்த மாத இறுதியில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைதான மருத்துவர் திட்டமிட்டே இந்த செயலில் ஈடுபட்டாரா அல்லது அவரது கவனக்குறைவால் இந்த பாதிப்பு ஏற்பட்டதா என்பது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைதாகியுள்ள மருத்துவருக்கும் எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதாக அரசு மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

சிந்த் மாகாணத்தில் உள்ள லாகார்னா நகரில் மட்டும் இதுவரை ஆயிரக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலையை எண்ணி கடும் கோபத்தில் இருப்பதாகவும், வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்