பசியால் வாடும் நாட்டு மக்கள்.. அதிபர் மனைவி இப்படி செய்யலாமா? கடும் விமர்சனத்தை ஏற்படுத்திய புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

துருக்கி மக்கள் சரியான வருமானம் இல்லாமல் பசி பட்டினியோடு இருக்கும் நிலையில் நாட்டின் அதிபர் ரிசெப் தய்யிப்பின் மனைவி குறித்து வெளியான புகைப்படம் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.

துருக்கி அதிபர் ரிசெப் தய்யிப் எர்டகானின் மனைவி எமைன் எர்டகான்.

இவர் தனது கணவருடன் அரசு முறை பயணமாக ஜப்பானுக்கு சமீபத்தில் சென்றார். டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனைக்கு ரிசெப், மனைவியுடன் சென்ற புகைப்படங்கள் வெளியானது.

இதில் அதிபரின் மனைவி வைத்திருந்த கைப்பை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

போட்டோ வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே எமைன் வைத்திருந்த கைப்பையின் விலை 50,000 அமெரிக்க டொலர்கள் என்பதை சமூகவலைதள பயன்பட்டாளர்கள் கண்டறிந்து விமர்சிக்க துவங்கினர்.

அதிபர் மனைவியின் கைப்பை விலை, அந்நாட்டில் உள்ள 11 பேருக்கு ஓராண்டிற்கு வழங்கப்படும் குறைந்தபட்ச தினக்கூலிக்கு சமம்.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது துருக்கி. மக்கள் விலைவாசி உயர்வால் துன்பப்பட்டு பலர் பசி பட்டினியுடன் இருந்து வரும் நிலையில் அதிபரின் மனைவி இவ்வளவு விலையுயர்ந்த கைப்பையை உபயோகப்படுத்துவது சரியா என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...