பொதுமக்கள், சிறார்களின் கண்முன் கைதியின் தலையை துண்டித்த பயங்கரவாதிகள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்
322Shares

ஆப்கானிஸ்தான் நாட்டில் பொதுமக்கள், சிறார்களின் கண்முன் பிணைக்கைதியாக பிடித்துவைக்கப்பட்ட ஒருவரின் தலையை பயங்கரவாதிகள் துண்டித்திருக்கும் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு ஊடக ஆராய்ச்சி நிறுவனம் இன்று ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட மூன்று புகைப்பங்களை வெளியிட்டுள்ளது.

குனார் மாகாணத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில், பிணைக்கைதியாக பிடித்துவைக்கப்பட்டிருக்கும் ஃபட்ல் அஹ்மத் என்பவருக்கு சிவப்பு நிறத்திலான ஆடையினை உடுத்தி பொதுமக்கள் முன்பு முழங்கால் போட வைத்துள்ளனர்.

சீருடையில் இருக்கும் பயங்கரவாதிகளை அங்கிருந்த சிறார்கள் உற்சாகப்படுத்தும் விதத்திலும், அவர்களின் முன் வரிசையில் இருக்கும் ஒரு சிறுவன் ஆயுதத்துடன் நின்றுகொண்டிருந்ததாகவும் அந்த ஊடக நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்துவதற்காக காபூலில் தாக்குதல் நடத்தி பயிற்சி பெறும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்தே இந்த சம்பவம் நடந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்