233 பேரை காப்பாற்றியது எப்படி? விமானத்தில் நடந்தது என்ன? விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பெரும் விபத்தில் சிக்கிவிருந்த பயணிகள் விமானத்தை விமானி காப்பாற்றியது எப்படி? கடைசி நிமிடங்களில் அவர் பேசியது என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைநகர் மாஸ்கோவின் ஜுகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 233 பேருடன் கடந்த 15-ஆம் திகதி காலை 6 மணிக்கு மேல் புறப்பட்ட Ural Airlines நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இறக்கை மீது பறவை ஒன்று மோதியதால் இரண்டு இன்ஜின்களில் தீப்பற்றியது.

இதனால் விமானத்தை தொடர்ந்து இயக்கினால், மிகப் பெரிய விபத்து ஏற்படலாம், பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எண்ணி, உடனடியாக விமானத்தின் தலைமை விமானி Damir Yusupov(41), அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் அருகில் இருக்கும் விமானநிலையத்தைப் பற்றி கூறிய போது, அந்தளவிற்கு விமானத்த்தை இயக்க முடியாது என்பதால், விமானிகளான Damir Yusupov-Georgy Murzin(23) ஆகியோர் உடனடியாக தரையிரக்க முடிவு செய்துள்ளனர்.

அதன் படி அங்கிருந்த சோளக்கருது காட்டில் விமானத்தை தரையிரக்கினர். இதனால் சிலருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டது. மற்றபடி 233 பயணிகளும் பத்திரமாக காப்பாற்றப்பட்டனர்.

இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் விமானம் புறப்படுவதற்கு முன்பும், விமானம் விபத்திலிருந்து எப்படி தப்பியது என்பதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளது.

அதில் கடந்த வியாழக்கிழமை சரியாக காலை 06.01 மணிக்கு விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. அப்போது விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து, சரியான தெரிவு 7 கி.மீற்றர், வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ், பறவைகள் அங்கும், இங்கும் பறக்கின்றன.

அதன் பின் 06.12 மணிக்கு விமானம் பறப்பதற்கு Runway 12 வழியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனுமதி கொடுக்கப்படுகிறது. அப்போது பறவைகள் அங்கும், இங்கும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து 06.14 மணிக்கு தலைமை விமானி Damir Yusupov, விமான கட்டுப்பாட்டு அறைக்கு, அவசரத்திற்கான சிக்னலை அனுப்புகிறார்.

அதன் பின் அவர்கள் என்ன என்று கேட்கும் போது, விமானத்தின் ஒரு இன்ஜின் செயலிழந்துவிட்டது என்று கூற, உடனே அவர்களிடம் நான் திரும்ப வேண்டும் என்று விமானி அனுமதி கேட்கிறார், உடனே கட்டுப்பாட்டு அறையில் திரும்பும் படி அனுமதி கிடைக்கிறது.

திரும்பும் போது திடீரென்று இரண்டாவது இன்ஜினிலும் பிரச்சனை ஏற்பட்டு செயலிழுந்துவிடவே, சுமார் 40 விநாடிகளுக்கு பிறகு விமானி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு Damir Yusupov அவசரசமாக ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு பணியாளர்களை அனுப்பும் படி கேட்கிறார்.

உடனே கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள் என்ன நடக்கிறது தெளிவாக சொல்லுங்கள், எத்தனை பயணிகள் இருக்கின்றனர் என்ற போது, நான் விமானத்தை பத்திரமாக இறக்கிவிட்டேன் என்று கூற, தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேள்வி வந்து கொண்டே இருந்ததால், ஒரு கட்டத்தில் சற்று கோபமடைந்த Yusupov நான் பயணிகளை இறக்கிக் கொண்டிருக்கிறேன், என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார்.

அதன் பின் 7 நிமிடங்கள் கழித்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து தற்போது நிலை என்ன? யாராவது இறந்திருக்கிறார்களா? காயம் எதுவும் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்ப விமானத்தில் 227 பயணிகள், 7 விமான ஊழியர்கள் என 233 பேர் இருக்கிறோம்.

இறப்பு எதுவும் இல்லை, காயங்கள் பற்றி சிறிது நேரம் கழித்து கூறுகிறேன் என்று Yusupov கூறியுள்ளார். அதன் பின் மீண்டும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, யாருக்கும் எதுவும் ஆகவில்லை, சரியாக கவனீத்தீர்களா? என்ற கேள்வியும், தற்போது நீங்கள் இருக்கும் இடத்தின் சிக்னலை பெற வேண்டும், அதனால் விமானத்தின் இண்டிகேட்டரை ஆன் செய்யும் படி கூறியுள்ளனர்.

இதையடுத்து விமானி ஆன் செய்ய, உடனடியாக குறித்த பகுதிக்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும் என்று கட்டுப்பாட்டு அறையிலிருந்து பதில் வர, விமானி நன்றி கூறுகிறார்.

அதன் பின் பயணிகள் பத்திரமாக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்திற்கு பின் விமானி Yusupov கூறுகையில், நான் பயப்படவில்லை, முடிந்தவரை சீராக இறக்க முயற்சி செய்தேன், அதே போல் சறுக்கல் போன்று செங்குத்து வேகத்தை குறைக்க முயற்சி செய்தேன் என்று கூறினார். மேலும் அவர் பயணிகளிடம் நான் அவர்களை சரியாக அவர்கள் அடைய வேண்டிய இலக்கிற்கு கொண்டு செல்ல முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.

233 பேரின் உயிரைக்காப்பாற்றிய தலைமை விமானி மற்றும் துணை விமானிக்கு ஹீரோ ஆப் ரஷ்யா என்ற விருதும், விமான ஊழியர்களுக்கு தைரியமாக இருந்ததற்கான விருதும் வழங்கப்படும் என்று ரஷ்யா ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers