பிறந்த குழந்தைக்கு போதை மருந்து அளித்த கொடூர தாயார்: பின்னர் ஏற்பட்ட துயர சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

நியூ மெக்சிகோ பகுதியில் போதை மருந்துக்கு அடிமையான பெண் ஒருவர் தமது பிஞ்சு குழந்தைக்கு ஊசியால் போதை மருந்தை செலுத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூ மெக்சிகோ பகுதியின் அல்கால்ட் நகரிலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

வெளியூருக்கு சென்று திரும்பிய கணவன், தமது மனைவியிடம் கர்ப்பமாக இருந்த எந்த அறிகுறியும் தென்படவில்லை என்ற சந்தேகத்தில் விசாரித்துள்ளார்.

அப்போது அவர் அந்த நடுக்கும் தகவலை தமது கணவரிடம் தெரிவித்துள்ளார். அருகாமையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிள்ளை பெற்றெடுத்ததாகவும்,

பிரசவத்தால் ஏற்பட்ட வலி தாங்க முடியாமல் தாம் சுய நினைவை இழந்ததாகவும், அதுவே தமது பிள்ளை மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

தமது மனைவியின் இந்த கொடூர பதில் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார், குறித்த பெண்மணியை விசாரித்துள்ளனர்.

அதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். மட்டுமின்றி, போதை மருந்து செலுத்தி கொல்லப்பட்ட குழுந்தையை குப்பைகளுக்கான பையில் இருந்து பொலிசார் மீட்டுள்ளனர்.

பிறந்த குழந்தைக்கு ஹெராயின் போதை மருந்தை அவர் செலுத்தியிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்