பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனை போனில் கடுமையாக எச்சரித்த ஈரான் ஜனாதிபதி ரூஹானி

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி சனிக்கிழமை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை போனில் கடுமையாக எச்சரித்து்ளளார்.

ஐரோப்பா தனது சொந்த முயற்சிகளுக்கு ஏற்ப செயல்படாவிட்டால் ஈரான் தனது அணுசக்தி கடமைகளை குறைப்பதில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானுக்கும் உலக வல்லரசுகளுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒருதலைப்பட்சமாக அமெரிக்காவை விலக்கிக் கொண்டதை தொடர்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் முதல் வளைகுடாவில் பதட்டங்கள் அதிகரித்துள்ளன.

சமீபத்திய மாதங்களில் வளைகுடாவில் கப்பல்கள், ட்ரோன்கள் தாக்கப்பட்டன மற்றும் எண்ணெய் டேங்கர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நிலைமையை சரிசெய்வதற்கான முயற்சிகளை மக்ரோன் முன்னெடுத்து வருகிறார், சில நாட்களுக்கு முன்பு ஜி-7 உச்சிமாநாட்டின் போது ரூஹானி மற்றும் டிரம்ப் ஆகியோரிடையே சந்திப்பு எற்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால், ஒப்பந்தத்தில் இருந்து விலகியதிலிருந்து ஈரானின் மீது போட்ட பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா முதலில் நீக்காவிட்டால், சந்திப்பு நிகழாது என ரூஹானி கூறியிருந்தார்.

இந்நிலையில், ஐரோப்பா தனது கடமைகளை செயல்படுத்த முடியாவிட்டால், ஈரான் அதன் JCPOA கடமைகளை குறைக்க மூன்றாவது நடவடிக்கை எடுக்கும் என்று ரூஹானி தொலைபேசி அழைப்பில் மக்ரோனிடம் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கை மற்றவர்களைப் போலவே மீறக்கூடியதாக இருக்கும் என்று ஈரானிய அரசாங்கத்தின் இணையதளத்தில் மேற்கோள் காட்டினார்.

துரதிர்ஷ்டவசமாக அமெரிக்காவின் இந்த ஒருதலைப்பட்ச நடவடிக்கைக்குப் பின்னர், ஐரோப்பிய நாடுகள் தங்கள் கடமைகளைச் செயல்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

JCPOA இன் கட்டுப்பாடுகள் மாறாதவை மற்றும் அனைத்து தரப்பினரும் அதன் கட்டுப்பாடுகளில் உறுதியுடன் இருக்க வேண்டும் என ரூஹானி குறிப்பிட்டார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்