மன அழுத்தம் காரணமாக இளம்பெண் எடுத்த கோர முடிவு: ஒரு எச்சரிக்கை வீடியோ!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

மன அழுத்தம் காரணமாக இளம்பெண் ஒருவர் பட்டப்பகலில் 12 மாடி கட்டிடம் ஒன்றிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலைச் சேர்ந்த Grazielli Martinelli (29) தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

வெளியாகியுள்ள வீடியோவில், ஒரு தீயணைப்பு வீரர் Grazielliயை காப்பாற்றுவதற்காக அவரை நெருங்கவும், ஓடிச் சென்று 12ஆவது மாடியிலிருந்து அவர் குதிக்கும் கோர காட்சி பதிவாகியுள்ளது.

வீடியோவை காண

Grazielli ஒரு பேஷன் டிசைனரும், அமேஸான் காடுகள் மீது அக்கறை கொண்ட ஒரு சமூக ஆர்வலரும்கூட.

அவரது சமூக ஊடக கணக்குகளில் தொடர்ந்து அவர் தனது மன அழுத்ததை வெளிப்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது.

அரை நிர்வாணமாக இருந்ததாக கூறப்படும் Grazielli தனது வீட்டின் மாடியிலிருந்து குதிக்க முயல, அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரும், தீயணைப்பு படை வீரர் ஒருவரும் சுமார் ஐந்து மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவரது மனதை மாற்ற முயற்சி செய்துள்ளனர்.

அவர்கள் Grazielliயின் கவனத்தை தங்கள் பக்கம் வைத்திருக்கும்போது, மெதுவாக மாடியில் ஏறிய மற்றொரு தீயணைப்பு வீரர் அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளார்.

ஆனால் தன்னை அவர் நெருங்குவதைக் கண்டதும், அதுவரை பேசிக் கொண்டிருந்த Grazielli, ஓடிச்சென்று 12ஆவது மாடியின் உச்சியிலிருந்து குதித்துவிட்டார்.

சமீபத்தில் ஒரு முறை ஒருவர் தற்கொலை செய்து கொண்டபோது, Grazielliயை பேட்டி எடுத்த ஒருவர் நீங்களும் தற்கொலை செய்து கொள்வீர்களா? என்று கேட்க, வாழ்வு எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளத்தயார் என தைரியமாக பதிலளித்திருந்தார் அவர்.

ஆனால் மன அழுத்தம் அவரது தைரியத்தை மேற்கொண்டு விட்டதோடு, அவரையும் பலிகொண்டு விட்டது!

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்