200 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

டென்மார்க்கில் யூதர்களின் கல்லறைத் தோட்டத்தின் 80 கல்லறைகள் மர்ம மனிதர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டென்மார்க்கில் Randers நகரம் யூதர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். கிட்டத்தட்ட 6,000 யூதர்கள் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

அங்குள்ள ஆஸ்ட்ரே கிர்கெகார்டு எனும் யூதர்களின் கல்லறை தோட்டத்தில், 80 கல்லறைகள் மர்ம மனிதர்களால் சனிக்கிழமை சேதப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த கல்லறைகள் அனைத்தும் சுமார் 200 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட காவல்துறையினர், 80க்கும் அதிகமான கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

சில கல்லறைகள் பச்சை நிற சாயம் மூலம் கிறுக்கப்பட்டுள்ளன, மேலும் சில கல்லறைகளின் பெயர்ப்பலகை மற்றும் கற்கள் பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் கல்லறைகள் மீது எவ்வித எழுத்துக்களோ, குறியீடுகளோ எழுதப்படவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள முக்கிய யூத வழிபாட்டுத்தலத்தின் அருகே மர்ம நபர் ஒருவர் யூதர் ஒருவரை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...