3 பிரித்தானியர்? 73 கனடேடியர்கள்! 176 பேர் பலியான விமான விபத்தில் இறந்தவர்கள் பற்றி வெளியான தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஈரான் நாட்டில் 176 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், அனைவரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இறந்தவர்கள் எந்த நாட்டினை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருக்கும் Imam Khomeini சர்வதேச விமானநிலையத்தில் இருந்து உக்ரைன் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விமான ஊழியர்கள் உட்பட 176 பேருடன் இன்று புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களிலே திடீரென்று தொழில் நுட்ப கோளாறு காரணமாக எரிந்த நிலையில் கீழே விழுந்தது. இதனால் விமானத்தில் இருந்த 176 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருப்பதாக கூறப்பட்டாலும், ஈரான் தவறுதலாக ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில் விபத்து நடந்த இன்று தான் ஈரான் இராணுவம், ஈராக்கில் இருந்த அமெரிக்காவின் இரண்டு தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

அதுமட்டுமின்றி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தால், உடனடியாக விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு ஏதேனும் தகவல் கொடுத்திருப்பார், ஆனால் அவரும் எந்த ஒரு தகவலும் கொடுக்காததால், இது விபத்தா இல்லை வேறு ஏதும் காரணமா? என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் இருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்று உயிரிழந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. அதில் பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் 3 பேரும், கனடாவை சேர்ந்தவர் 73 பேரும், ஈரானை சேர்ந்தவர்கள் 71 பேரும், உக்ரைனை சேர்ந்தவர்கள் 15 பேரும் என்று தெரிவித்துள்ளது.

ஆனால் அவர்களின் பெயர், புகைப்படங்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை, அதே சமயம் பிரித்தானியார்கள் 3 பேர் என்பது உறுதியாக தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்