176 பேரை பலி கொண்ட விமானத்தின் கருப்பு பெட்டிகளின் காட்சிகளை வெளியிட்டது ஈரான்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்
626Shares

விபத்துக்குள்ளான உக்ரேனிய விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு கருப்பு பெட்டிகளின் காட்சிகளை ஈரானிய அரசு வெளியிட்டுள்ளது.

உக்ரேனிய சர்வதேச விமான நிறுவனம் (யுஐஏ) போயிங் 737-800 தெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இதில் 167 பயணிகள் மற்றும் ஒன்பது பணியாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த விமானத்தில் 82 ஈரானியர்கள் மற்றும் 63 கனடியர்கள், 10 சுவீடன், நான்கு ஆப்கானியர்கள், மூன்று ஜேர்மனியர்கள் மற்றும் மூன்று இங்கிலாந்து குடிமக்கள் இருந்தனர்.

ஈராக்கில் உள்ள இராணுவத்தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில் இந்த விபத்து நிகழ்ந்ததால், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஈரானை குற்றம் சுமத்தின.

ஆனால் ஈரான், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக்கூறியதோடு, போயிங் நிறுவனத்திடம் கருப்பு பெட்டியை ஒப்படைக்கவும் மறுத்துவிட்டது.

இந்த நிலையில் ஈரானிய அரசு தொலைக்காட்சியால் ஆன்லைனில் வெளியிடப்பட்ட வீடியோ காட்சியில், ஒரு மரக் கூண்டுக்குள் இரண்டு சாதனங்களைக் காட்டின. அவை காக்பிட் குரல் ரெக்கார்டர் மற்றும் விமான தரவு ரெக்கார்டர் என்று வர்ணனையாளர் ஒருவர் கூறுகிறார்.

இரண்டு கருப்பு பெட்டிகளும் சேதமடைந்துள்ளன. ஆனால் அவற்றின் நினைவகத்தை பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்யலாம் என்று அவர் கூறுகிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்