முதன் முறையாக மக்களுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்ட ஈரான் நாளேடுகள்: அரசுக்கு நெருக்கடி!

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
332Shares

ஈரான் அரசுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் போராட்டத்தில் குதிக்கவே, உள்ளூர் நாளேடுகளும் மக்களுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டுள்ளன.

தெஹ்ரானில் உக்ரேனிய பயணிகள் விமானம் ஈரானிய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் தற்போது உள்நாட்டு போரை உருவாக்கும் அளவுக்கு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று தொடங்கி முக்கிய பல்கலைக்கழக மாணவர்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டதுடன், மன்னிப்பு கோருக, பதவி விலகுக என முழக்கமிட்டு வருகின்றனர்.

மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் திடீர் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர ஈரானிய பொலிசார் கடும்போக்குடன் செயல்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஈரானில் இன்று வெளியான அனைத்து முக்கிய நாளேடுகளும், விமான விபத்தில் சிக்கியவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முதல் பக்கத்தை கருப்பு வண்ணத்தில் அச்சிட்டுள்ளனர்.

புதனன்று நடந்த இந்த விமான விபத்து தொடர்பில் உண்மை வெளிவந்த பின்னரே அங்குள்ள நாளேடுகள் அஞ்சலி செலுத்தி வருகின்றன.

பல நாளேடுகளும் இந்த விமான விபத்தை கடுமையான வார்த்தைகளால் கண்டித்துள்ளதுடன்,

பதற்றமான சூழல் இருக்கும்போது ஏன் பயணிகள் விமானத்தை புறப்பட அனுமதி வழங்கினார்கள் என கேள்வி எழுப்பியுள்ளது.

ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ முக்கிய நாளேடு ஒன்று பலியானவர்களின் பெயர்களை விமானத்தின் வால் பகுதியாக சித்தரித்து வெளியிட்டுள்ளது.

இன்னொரு நாளேடு ஒன்று வெட்கக்கேடு என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் நாட்டில் அரசுக்கு எதிரான விமர்சனங்கள் ஒரு எல்லைக்குள் நின்றே முன்வைக்கப்படும்.

ஆனால் தற்போது முக்கிய நாளேடுகள் அனைத்தும் கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்