கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கென்யாவில் மிக மோசமான பாலைவன-வெட்டுக்கிளிகள், உணவு பாதுகாப்பை பாதிக்கும் அளவிற்கு கிழக்கு ஆப்பிரிக்கவையே அச்சுறுத்து வருகின்றன.
கென்யாவில் வெட்டுக்கிளி திரள் நடவடிக்கைகளில் "மிகவும் ஆபத்தான அதிகரிப்பு" பதிவாகியுள்ளதாக கிழக்கு ஆப்பிரிக்க பிராந்திய அமைப்பு இந்த வாரம் தெரிவித்துள்ளது.
ஒரு திரளான வெட்டுக்கிளி கூட்டம் நாட்டின் வடகிழக்கில் 60 கி.மீ (37 மைல்) நீளத்திலும், 40 கி.மீ (25 மைல்) அகலத்திலும் ஆட்கொண்டிருப்பதாக சர்வதேச அரசு மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஜி.ஏ.டி) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் முன்னோடியில்லாத வகையில் பெய்த மழையே வெட்டுக்கிளிகளின் பெருக்கத்திற்கு முதன்மையான காரணம் என்று கருதப்படுகிறது.
So the locusts made it to ukambani and I feel like everyone else wasn’t dealing with them right 😂 kwa isitwa ya yesù! pic.twitter.com/0iPmAQUu2Q
— kelvin kaesa (@kelvinKaesa) January 24, 2020
ஒரு விரல் நீளம் கொண்ட மில்லியன் கணக்கிலான இந்த பூச்சிகள், ஒன்றாக பறந்து பயிர்களை விழுங்கி மேய்ச்சல் நிலங்களை அழித்து, உணவு உற்பத்தி மற்றும் உள்ளூர் பொருளாதாரங்களை அச்சுறுத்துகின்றன.
மிகவும் ஆபத்தான வெட்டுக்கிளி இனமாகக் கருதப்படும் பாலைவன வெட்டுக்கிளிகள் அதிகரிப்பு, சோமாலியா, எத்தியோப்பியா, சூடான், ஜிபூட்டி மற்றும் எரித்திரியாவின் சில பகுதிகளையும் பாதித்துள்ளது. தெற்கு சூடான் மற்றும் உகாண்டாவின் பகுதிகள் அடுத்ததாக இருக்கலாம் என்று ஐஜிஏடி எச்சரித்துள்ளது.

இந்த அதிகரிப்பனாது, பிராந்தியத்தின் மோசமான உணவு பாதுகாப்பு நிலைமையை மேலும் மோசமாக்குகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை நூறாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
"இந்த படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நாங்கள் உடனடியாகவும், பெரிய அளவிலும் செயல்பட வேண்டும்" என்று கிழக்கு ஆப்பிரிக்காவின் FAO இன் துணை பிராந்திய ஒருங்கிணைப்பாளர் டேவிட் பிரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மேலும், "மார்ச் மாதத்தில் மழை தொடங்கும் போது வெட்டுக்கிளி இனப்பெருக்கம் ஒரு புதிய அலையாக இருக்கும். எனவே திரள்களைக் கட்டுப்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரங்களையும் உணவுப் பாதுகாப்பையும் பாதுகாக்க இதுவே சிறந்த நேரம்.” என கூறியுள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் ஏற்கனவே அதிக அளவு உணவுப் பாதுகாப்பின்மை உள்ளது, வறட்சி மற்றும் வெள்ளம் காரணமாக 19 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினியை எதிர்கொண்டுள்ளனர் என்று FAO தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் பாலைவன வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை 500 மடங்கு அதிகரிக்கும், கிழக்கு ஆபிரிக்காவின் சமீபத்திய வானிலை விரைவான வெட்டுக்கிளி இனப்பெருக்கத்திற்கு சாதகமானது என அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.