மனைவியை குத்தி கொலை செய்தது ஏன்? வெளிநாட்டு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த இந்திய கணவர்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
751Shares

கேரளாவை சேர்ந்த கணவர் தன் மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என்ற சந்தேகத்தால் கொலை செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் நாயர். இவருக்கு வித்தியா சந்திரன் என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் வேலை செய்து வந்த வித்தியா சந்திரனை, சந்திரசேகரன் திடீரென்று கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினார்.

அதன் பின் சில மணி நேரங்களில் பொலிசார் அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை துபாய் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து நீதிமன்ற விசாரணையின் போது, சந்திரசேகரன் நாயர் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அவர் தன்னுடைய மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என்ற சந்தேகத்தால் கொலை செய்ததாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக வித்யாவின் மேலாளரிடமிருந்து குறுந்தகவல் ஒன்று தனக்கு கிடைத்ததாக கூறியுள்ளார்.

இந்த வழக்கின் போது குறித்த மேலாளர் நீதிமன்றத்தில், வெளியே சென்ற வித்யா நீண்ட நேரமாகியும், திரும்பாத காரணத்தினால் அவருடைய மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டேன்.

ஆனால் அவருடைய போனில் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லாத காரணத்தினால், அலுவலக டிரைவரிடம் வித்யாவைப் பற்றி கூறினேன். உடனே அவர் வித்யாவை தேடிய போது, கார் பார்க்கில் கீழே காயங்களுடன் விழுந்து கிடந்ததைக் கண்டுள்ளார்.

இதையடுத்து உடனடியாக நான் அங்கு விரைந்து சென்று பார்த்த போது, காயங்களுடன் இறந்து கிடந்ததைக் கண்டேன் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணையை வரும் 2-ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்