கொரோனா வைரஸ் அச்சம்... கிருமி நாசினியை அளவுக்கதிகமாக தெளித்த ஊழியர்கள்: செத்து விழுந்த வன விலங்குகள்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சீனாவின் ஹுபே மாகாணத்தைச் சுற்றிலும் கொரோனா வைரஸ் தொற்றை தவிர்ப்பதற்காக சுகாதாரத்துறை ஊழியர்கள் கிருமி நாசினியை தெளித்துவருகிறார்கள். ஆனால், அவர்களது இந்த செயல் எதிர்பாராதவிதமாக ஒரு எதிர்வினையை உருவாக்கியுள்ளது.

ஹூபே மாகாண எல்லையிலுள்ள Chongqing பகுதியில் ஏராளமான வன விலங்குகளும் பறவைகளும் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ளன.

கிருமி நாசினி அதிக அளவில் தெளிக்கப்பட்டதால் இந்த வன விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கரிச்சான் குருவிகள், காட்டுப்பன்றிகள், மர நாய்கள் என அப்பகுதியில் 135 வன விலங்குகள் உயிரிழந்துள்ளன.

இதில் சோகம் என்னவென்றால், இறந்த விலங்குகளில் எதற்கும் கொரோனா தொற்றோ, பறவைக்காய்ச்சலோ அல்லது Newcastle disease என்னும் பறவைகளைத் தாக்கும் நோயோ இல்லை!

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அந்த விலங்குகள் மற்றும் பறவைகளின் உடல்களை புதைத்துள்ள அதிகாரிகள், அவை புதைக்கப்பட்ட இடங்களையும், அவை கண்டுபிடிக்கப்பட்ட இடங்களையும் கிருமிநீக்கம் செய்துள்ளனர்.

இதற்கிடையில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் மினி டாங்குகள் மூலமாகவும், ட்ரோன்கள் மூலமாகவும் கிருமி நாசினி தெளிக்கப்படும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்